
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து;.
01.07.2025 08:08:19
தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது.
விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.