பலத்த மழையால் நுவரெலியாவில் விவசாயம் பாதிப்பு

24.10.2021 10:26:49

சீரற்ற காலநிலைக் காரணமாக நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களும், விவசாய நிலங்கள் அதிகமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

நுவரெலியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக வாகனங்களில் பயணிக்கும்போது சாரதிகள் விளக்குகளை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.