எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணம்.

20.09.2026 15:47:00

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.