இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்.
|
இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெயின் இடையே இராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளது. இந்த எல்லை கட்டுப்பாடானது ஆகஸ்ட் 8ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. |
|
ஸ்பெயினின் 2 நாட்கள் கெடுவை இத்தாலி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து ஸ்பெயினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார். இந்த நடவடிக்கை ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது. அத்துடன் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்து இருந்தது ஆனால் அதனை இத்தாலி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்தே ஸ்பெயின் நாட்டின் புதிய தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. |