புரட்சி எனக் கூறி பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டது!

05.03.2024 08:10:00

நாட்டில் புதிய புரட்சியொன்றை செய்யப் போவதாகக் கூறிய தரப்பினரால் நாட்டில் பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

 

மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 119 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த காலத்தில் பயங்கரவாதத்தால் இந்நாட்டில் பல உயிர்கள் பலியாகின. வடக்கை போலவே தெற்கிலும் பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தது. நாட்டில் மீண்டும் இவ்வாறான அவலங்கள் உருவாக இடமளிக்கக் கூடாது.

ஒட்டுமொத்த நாடாக நாம் 90 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளோம். 2019 ஆம் ஆண்டு  செய்த தவறை மீண்டும் செய்யாதிருப்போம். இந்த அரசாங்கம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளால் நாடு நாசமடைந்தது.
மீண்டும் இவ்வாறானதொரு நாசகாரம் நடந்தால் நாட்டுக்கு என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.