குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட 6 பேர் கைது

15.09.2021 09:14:30

இந்தியாவின் பல பாகங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட 6 பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தசரா திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், குண்டுத் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல பாகங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக டெல்லி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பேர் உட்பட 6 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம் முதலான பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.