ரஷ்யாவிற்கு மீண்டும் மரண அடி கொடுத்த உக்ரைன்!
|
காஸ்பியன் கடலில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற இரண்டு ரஷ்ய கப்பல்களைத் தாக்கியதாக உக்ரைனின் சிறப்புப் படைகள் தெரிவித்துள்ளன. குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளூர் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளும் அமைப்புடன் இணைந்து நடத்தியதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது |
|
தாக்குதல் எப்போது நடந்தது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. உக்ரைன் ட்ரோன்கள் முதல் முறையாக காஸ்பியன் கடலில் உள்ள ஒரு ரஷ்ய எண்ணெய் கிணற்றைத் தாக்கியதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். சுமார் 20 கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதை இது முடக்கியுள்ளது. இந்த நிலையில், சிறப்புப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்கள் கப்பல்களை எவ்வாறு தாக்கினார்கள் அல்லது எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டது என்பது குறித்து உறுதி செய்யவில்லை. ரஷ்யாவின் ஒரு பகுதியான கல்மிகியா குடியரசின் கடற்கரையில் கப்பல்கள் தாக்கப்பட்டதாக மட்டும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான கப்பல்கள் Composer Rakhmaninoff மற்றும் Askar-Sarydzha என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கப்பல்களும் ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இராணுவ சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டவையாகும். பிளாக் ஸ்பார்க் என்ற இயக்கம் கப்பல்களின் இயக்கம் மற்றும் சரக்குகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கியதாக உக்ரைன் அதிகாரிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். |