ஜேர்மனி பிரான்ஸ் உறவில் விரிசல்?
31.12.2025 11:44:44
|
ஜேர்மனி பிரான்ஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போர் தொடர்பில் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான புடினுடன் பேச்சுவார்த்தைகளை துவக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால், மேக்ரான் தனது திட்டம் குறித்து ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸிடம் தெரிவிக்கவில்லையாம். |
|
உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனி ரஷ்யாவை எதிர்த்து நிற்க முன்வந்துள்ள நிலையில், பிரான்ஸ் பின்வாங்குவதாக கூறப்படுகிறது. ஆக, ஐரோப்பாவின் வலிமையான தலைவர்கள் இருவர் உக்ரைன் விடயத்தில் இன்னமும் இணைந்து நிற்கிறார்களா அல்லது அவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை. |