கூடங்குளம் கழிவு பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் 2 வாரம் கெடு

05.05.2022 08:15:54

தமிழகத்தில் கூடங்குளம் அணு உற்பத்தி மையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர் ராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்திய அணு சக்தி கழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘கூடங்குளத்தில் தொலைதூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க சுமார் 50 மாதங்கள் அதாவது 2026ம் ஆண்டுவரையில் கால அவகாசம் தேவைப்படுகிறது. 

இந்த கால அவகாசம் எதற்காக?, கட்டமைப்பு குறித்த நடவடிக்கை என்ன?, தற்போது வரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை 2 வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்,’ என தெரிவித்தார். 

இதையடுத்து, இந்திய அணு சக்தி கழகத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 40 வழக்கில் தொடர்புள்ள நக்சலைட் சுட்டுக்கொலை: ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது  முர்ஹூ காவல் நிலையத்துக்குட்பட்ட கோடா காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நக்சல்கள் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன பெயர் லாகா பகான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவன் பிஎல்எப்ஐ நக்சலைட் அமைப்பின் தெற்கு சோட்டாநாக்பூர் பிராந்திய குழு செயலாளர் ஆவான். இவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.