எதிர்க்கட்சிகள் கோரிய விவாதம்- அரசாங்கம் நிராகரிப்பு!

28.04.2026 09:02:00

திறைசேரியாவால் வழங்கப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, இந்த விவகாரங்கள் குறித்து ஒரு நாள் விவாதம் நடத்த எதிர்க்கட்சி கோரியிருந்தது.

இருப்பினும், அரசாங்கம் அதை நிராகரித்து விட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.