நயன்தாரா வில்லி வேட டாக்ஸிக் திரைப்படம்.

08.07.2026 15:18:00

கே.ஜி.எப் புகழ் நடிகர் யஷ் நடிப்பில், இயக்குனர் கீது மோஹன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்தியத் திரைப்படம் 'டாக்ஸிக்'.

முதல் சிங்கிள் பாடலான 'தபாஹி' தற்போது வெளியாகியுள்ளது. 

விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ள இப்பாடலின் தமிழ் பதிப்பிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.

நடிகர் யஷ் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த லிரிக்கல் வீடியோவில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் தோன்றி இரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளார்.

இந்நிலையில்,இப்படத்தில் நயன்தாரா 'கங்கா' என்ற மிகவும் அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது வழக்கமான ஹீரோயின் பாத்திரம் அல்லாமல், கதையின் போக்கை மாற்றும் வில்லி கதாபாத்திரமாகும்.

காதல் பெண்களை அரக்கர்களாக மாற்றுகிறது" என்ற பின்னணிக் குரலுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா ஆகியோரின் மிரட்டலான தோற்றங்கள் 'Ladies & Ladies' ப்ரோமோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 பெண் கதாபாத்திரங்களை வெறும் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் வில்லி மற்றும் 'கொடூரமான எண்ணங்களைக் கொண்ட வலிமையான பாத்திரங்களாக இயக்குனர் வடிவமைத்துள்ளார்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படமாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.