இந்தியாவிற்கு கைகொடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்!

22.07.2025 08:14:32

இந்தியாவிற்கு சீனா தொல்லை கொடுப்பதை தடுக்க, இந்தியாவின் இரண்டு நட்பு நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் நேரடி போர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய “உர போர்” தற்போது நடைபெற்று வருகிறது. DAP உரம் (Diammonium Phosphate) விநியோகத்தை சீனா தற்காலிகமாக நிறுத்தியது, இந்தியாவிற்கு சம்பா சாகுபடி பருவத்தின் (kharif season) தொடக்கத்தில் பெரும் சிக்கலை உருவாக்கியது.

ஆனால், இந்தியா மிகப்பாரிய டிப்ளோமாட்டிக் முயற்சியின் மூலம் இந்த பிரச்சனையை சமாளித்து வருகிறது.

இந்தியாவின் இந்த கடுமையான உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க, சவூதி அரேபியா மற்றும் மொரோக்கோ ஆகிய இரு நாடுகளும் முன் வந்துள்ளன.

சவூதி அரேபியாவுடன் நடந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 31 லட்சம் மெட்ரிக் டன் DAP இந்தியாவுக்கு கிடைக்கும்.

அதேபோல், மொரோக்கோவிடமிருந்து 5 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவிற்கு சீனாவிலிருந்து கடந்த பருவத்தில் 22 லட்சம் மெட்ரிக் டன் DAP கிடைத்தது. ஆனால் தற்போது அந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 7 லட்சம் மெட்ரிக் டன் உரம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யா, எகிப்து, நைஜீரியா, மொரிடானியா, டோகோ, டுனீசியா போன்ற நாடுகளுடன் இந்தியா உர விநியோகத்தைக் கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தங்களை ஆராய்ந்து வருகிறது.

சீனாவின் விலை குறைவானது என்றாலும், இந்தியாவின் பல்வேறு மூலோபாய கூட்டணிகள் தற்போது அதன் ஆதிக்கத்தை தளர்த்தியுள்ளன.