பங்களாஷே் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக அஷ்வெல் பிரின்ஸ்!
16.08.2021 04:36:09
பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அஷ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் ஆண்கள் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நிரந்தரப் பொறுப்பை ஏற்க ஆஷ்வெல் பிரின்ஸ், தென்னாபிரிக்காவின் மேற்கு மாகாண அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.
எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஆண்கள் டி-20 உலகக் கிண்ண இறுதி வரை அவர் பங்களாதேஷ் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவார்.
2002 தொடக்கம் 2011 க்கு இடையில் தென்னாபிரிக்காவுக்காக 66 டெஸ்ட், 52 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆஷ்வெல் பிரின்ஸ்.