காமன்வெல்த் மகளிர் ஹாக்கி : அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

05.08.2022 10:54:57

இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது . இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.