யூரோ கிண்ண கால்பந்து தொடர் : ஜேர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

30.06.2021 10:15:38

 

2020 ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி சார்பில், 75 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒருகோலை புகுத்த 86 ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் அணிக்காக இரண்டாவது கோலை புகுத்தினார்.

இந்தப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் இங்கிலாந்து அணி எதிர்வரும் 4 ஆம் திகதி உக்ரைன் அணியை காலிறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.