இந்தியாவில் உயர் மட்ட பேச்சு!

08.09.2022 00:05:00

இலங்கை பொருளாதார நெருக்கடி - இந்தியாவில் உயர் மட்ட பேச்சு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.எம்.எவ் தலைவர் இந்தியா வருகை

இதன்படி இரண்டு நாள் விஜயமாக இந்தியா வரும் சர்வதேச நாணய நிதிய தலைவர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சினை நடத்தவுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை உட்பட தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல்களுக்காகவே இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.