மரத்திலிருந்து விழுந்தவருக்கு கத்தி கழுத்தை வெட்டியதில் சாவு!
16.08.2021 04:18:37
தனது வீட்டு வளாகத்திலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர், மரத்திலிருந்து தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்து கத்தி கழுத்தை வெட்டியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மெதகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரத்தனதெனிய அராட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.சிறிசேன என்ற 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபரை மொனராகலை வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்ற போதிலும் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.