ரணில் மீது சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!

08.08.2022 09:33:27

நாடாளுமன்றத்தின் ஊடாக அதிபரை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தனக்கு வாக்களித்ததாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் பொய் சொல்கிறார். டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தீர்மானித்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.