கைது எதிர்பார்க்கப்பட்டதுதான்.. அமைதியாக இருங்கள்.. ஆதரவாளர்களுக்கு இம்ரான் கான் அறிவுரை

06.08.2023 09:04:46

  5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு. இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆதரவாளர்களுக்காக வீடியோ பதிவு. தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமாபாத் ஐஜி இம்ரான் கானை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆதரவாளர்களுக்காக வீடியோ பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ, கைது செய்யப்பட்டதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், " எனது கைது எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த செய்தியை பதிவு செய்தேன். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.