தமிழ் சினிமாவில் ரோஜா, ஜென்டில்மேன், காதலன் என கலக்க தொடங்கிய போதே ஹிந்தியிலும் கலக்கியவர் ரகுமான். இவர் முதல் முதலாக ஹிந்தியில் இசையமைத்த ரங்கீலா திரைப்படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. ரகுமானின் இசைக்கு நடனம் அசைக்க முடியாமல் அங்குள்ள நடன இயக்குனர்கள் திணறினார்கள்.
அதன்பின் ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பல நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில்தான் ரன்பீர் கபூர் இராமராகவும், கேஜிஎப் பட நடிகர் யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதாவாகவும் நடித்திருக்கும் ராமாயணா திரைப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வெளியாவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகிறது..
இந்நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த படத்தில் இடம்பெற்ற இசைக்கு எதிராக சில நெகட்டிவ் விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ‘ராமாயணா படத்தின் இசை குறித்த விமர்சனங்களுக்காக எனக்கு தூக்கத்தை இழக்க நான் விரும்பவில்லை. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பொன் மொழியை போல ‘அனைவரையும் மகிழ்விக்க நினைத்தால் தலைவராக இருக்க முடியாது.. போய் ஐஸ்கிரீம் விற்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.
இராமயணா இசை விமர்சனம் - கோபப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்.