ரயில் சேவைகள் பாதிப்பு!

17.01.2025 08:15:45

என்ஜின் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) காலை 30 ரயில் பயணங்கள் தடைப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அட்டவணையின்படி 68 என்ஜின் சாரதிகள் கடமையில் இருக்க வேண்டியிருந்த போதிலும், 48 பேர் மட்டுமே இன்று பணிக்கு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

27 என்ஜின் சாரதிகள் கடமைக்கு சமூகமளிப்பதில் இருந்து விலகியுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட பதவி உயர்வு பரீட்சைக்கு தயாராகி வருவதால் என்ஜின் சாரதிகள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை ரயில் சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் எச்சரித்துள்ளது.