மாதவிடாய் விவகாரம்: வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்ற இங்கிலாந்து மகளிர் கால்பந்து நிர்வாகம்

04.04.2023 21:55:18

நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர். ஷார்ட்ஸின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினருக்கு விளையாடும்போது அணியும் உடைகளை பிரபல நிறுவனமான நைக் (Nike) தயாரித்து தருகிறது.

இங்கிலாந்து மகளிர் கால்பந்து வீராங்கனைகள் நீண்ட காலமாக வெள்ளை நிற ஜெர்சியும் வெள்ளை நிற ஷார்ட்சும் அணிந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தனர். மாதவிடாய் காலத்தில் வெள்ளை நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதில் இங்கிலாந்து வீராங்கனைகள் சொல்ல முடியாத சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஷார்ட்சின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று நீல நிற ஷார்ட்சை அணிய இங்கிலாந்து மகளிர் கால்பந்து நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.

பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் வியாழக்கிழமை களம் காண்கிறது இங்கிலாந்து மகளிர் அணி. அந்த ஆட்டத்தில் இருந்து நீல நிற ஷார்ட்ஸ், வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.