இனவாதத்தை ஒழிக்க, முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
22.11.2025 14:14:00
நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மேலும் சில கட்சிகளின் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நாட்டடில் இனவாதத்தை ஒழிப்பதற்காக “இலங்கையர் தினத்தை” நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.