தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 334 பேர் கைது !

25.09.2021 06:10:03

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 77,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் 1,749 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது அனுமதியின்றி 176 வாகனங்களில் பயணித்த 329 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.