மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
24.07.2022 10:42:32
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் தென்னாபிரிக்க அணிக்கு கேசவ் மகாராஜ்ம் தலைமை தங்குகின்றனர்.
நடைபெற்று முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முக்கிய போட்டியாக இது அமையவுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென்னாபிரிக்க அணி, மூன்று ஒருநாள், மூன்று இருபதுக்கு இருபது மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.