குல்பாதின் - நபி ஜோடி பொறுப்பான ஆட்டம்
பாகிஸ்தான் அணியுடனான உலக கோப்பை சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், கேப்டன் முகமது நபி - குல்பாதின் நயிப் ஜோடியின் அபார ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் கணிசமான ஸ்கோரை எட்டியது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா (0), ஷாஷத் 8 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த குர்பாஸ், அஸ்கர் ஆப்கன் தலா 10 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, ஆப்கானிஸ்தான் 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.கரிம் ஜனத் 15, நஜிபுல்லா 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் முகமது நபி - குல்பாதின் நயிப் இணைந்து அதிரடியாக 71 ரன் சேர்க்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் குவித்தது. நபி, நயிப் தலா 35* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். பந்துவீச்சில் இமத் 2, அப்ரிடி, ராவுப், ஹசன் அலி, ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.