மணி ரத்னத்தின் அடுத்த படம்!

01.02.2025 08:15:00

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக பயணித்து கொண்டிருக்கிறார் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்து எடுக்க முடியாத, பொன்னியின் செல்வன் நாவலையும் படமாக்கி சாதனை படைத்தார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தை தொடர்ந்து மணி ரத்னம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் பண்ணப்போவதாக தகவல் வெளிவந்தது.

ஒரு பக்கம் ரஜினியை வைத்து படம் பண்ணபோகிறார், மறுபக்கம் மீண்டும் கமலுடன் இணைகிறார், மேலும் பொன்னியின் செல்வன் போல் சரித்திர கதையை படமாக்க போகிறார் என பல விதமாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்போகும் படத்திற்கு முன்பு, ஒரு சிறிய பட்ஜெட்டில், முழுக்க முழுக்க அறிமுக நடிகர், நடிகைகள் வைத்து படம் பண்ணலாம் என முடிவு செய்துள்ளாராம் மணி ரத்னம். அதற்கான வேளைகளில்தான் தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.