மீகொட பகுதியில் விபத்து ; மூவர் பலி!

03.08.2021 12:38:47

மீகொட – வட்டரெக பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று பாரவூர்தியுடன் மோதுண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.