ஜனநாயகன் படத்தின் மூன்றாவது பாடல்.

26.12.2025 15:28:26

அனிருத் - விஜய் கூட்டணியில் எப்போது படம் வெளிவந்தாலும் அந்த ஆல்பம் சூப்பர் டூப்பர் ஹிட்தான். கத்தி படத்தில் தொடங்கி இன்று ஜனநாயகன் வரை ஒவ்வொரு பாடல் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி பின்னணி இசையும் வெறித்தனமாக இருக்கும். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. 'தளபதி கச்சேரி' மற்றும் 'ஒரு பேரே வரலாறு' ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

'தளபதி கச்சேரி' பாடல் 81 மில்லியன் மற்றும் 'ஒரு பேரே வரலாறு' 31 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்திலிருந்து மூன்றாவது பாடல் 'செல்ல மகளே' நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். அதற்கான அறிவிப்பை அழகான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.