சிங்கமாக’ சீறிய ஷமி, பும்ரா, சிராஜ்
18.08.2021 14:30:19
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் மிரட்டினர். கடைசி கட்டத்தில் ஷமி, பும்ரா பேட்டிங்கில் அசத்தினர். பின் சிராஜ் உடன் சேர்ந்து ‘வேகத்தில்’ போட்டுத் தாக்க, இங்கிலாந்து அணி சிதறியது. இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 291 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து, 154 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரிஷாப் பன்ட் (14), இஷாந்த் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.