அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்

03.01.2021 10:11:48

ராமஜென்ம பூமி தீரத் கேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், அயோத்தியில் நேற்று கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் வடிவமைப்பு மற்றும் அடித்தள அமைப்பை நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் முடிவு செய்யும். ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் மகர சங்கராந்தியன்று (15-ந்தேதி) தொடங்கும். கட்டுமானப்பணிகள் 3 ஆண்டுகள் நடைபெறும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவில் கட்டுமானப்பணிகள் முடிந்து விடும்.

மிர்சாபூரில் இருந்து கொண்டுவரப்படும் பிரத்யேக கற்கள், ராமர்கோவில் அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தப்படும். 5 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதான கோவில் கட்டப்படும். கோவில், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளை கொண்டிருக்கும். 400 ஆண்டுகள் நிலைத்து நிற்கத்தக்க அளவில் சிறப்பு சிமெண்டு பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.