வேளாண் சட்ட மூலங்கள் 126 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம் !

31.03.2021 13:03:09

 

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் 126 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இதுவரை  உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த சட்டமூலங்களை மீளப் பெறும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.