மன்னாரில் நலன்புரி நன்மைளை பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு

29.07.2023 17:31:47

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இன்று சனிக்கிழமை (29) முதல் எதிர் வரும் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வங்கி கணக்குகளை திறக்க முடியும்.

நாளை ஞாயிறு (30) மற்றும்  1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறையாக உள்ள போதும் வங்கிகள் விசேடமாக  திறக்கப்படும்.

கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.

எனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கியில் வங்கி கணக்கை திறந்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.