முக்கிய அமைச்சு கைமாறியது

17.09.2022 10:00:00

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பதில் நிதி அமைச்சராக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், அவர் தற்பொழுது பிரிட்டன் சென்றுள்ளதால் பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கு பயணமான ரணில்

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் அதிபர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.