அரசாங்கம் தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் தப்பிக்க முடியாது- திஸ்ஸ அத்தநாயக்க

30.03.2021 08:47:21

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் பொய்யான காரணங்களை முன்வைத்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மோசடி செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு துணைபோய் இருக்கின்றது என்பதே அர்த்தமாகும்.

மேலும் துறைமுகத்திலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்படும் அனைத்து பொருட்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.