தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!

02.03.2026 14:44:15

திமுக கூட்டணியில் கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ் இடம் பெற்றிருக்கிறது.. 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அதேநேரம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் போன்றவர்கள் முன்வைத்தார்கள்..

ஒருபக்கம் பிரவின் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து ஒரு முறை பேசினார்.. அதேபோல் ஊடகம் ஒன்றில் பேசியபோது தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகளை தவெக வாங்கும்.. தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக தவெக மாறும்’ என கூறினார். அதேபோல் கிரிஷ் சோடங்கரும் தொடர்ந்து தவெகவை தூக்கி வைத்து பேசி வருகிறர்.

ஒருபக்கம், காங்கிரசுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்திருக்கிறது.. ஆனால், 25 தொகுதிகளை ஏற்க முடியாது என கிரிஷ் சோடங்கர் பேட்டி கொடுத்தார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. ஒரு பக்கம் தவெகவிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பலரும் சொல்கிறார்கள்.. அதாவது காங்கிரஸ் கேட்பதை திமுக கொடுக்காவிட்டால் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைகும் என சிலர் சொல்கிறார்கள்.

இந்த கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக  செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் செல்வபெருந்தகை ‘காங்கிரஸ் புறவாசல் வழியாக அரசியல் பேசும் கட்சி இல்லை. தவெகவிடம் காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசவில்லை.. கட்சியின் மாநில தலைவர் நான்தான்.. தவெகவுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி பேச சொல்லி தேசிய தலைமை என்னிடம் எந்த வழிகாட்டுதலையும் தரவில்லை’ என கூறியிருக்கிறார்..