Baby Do Die Do திரை விமர்சனம்!
|
ஹுமா குரேஷியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள Baby Do Die Do இந்தி கிரைம் த்ரில்லர் திரைப்படம் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. மும்பையில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு ஹோட்டலில் நுழையும் இரட்டை சகோதாரிகள், முகமுடி அணிந்த நபர் ஒருவரை கொலை செய்வதை பார்க்கின்றனர். அதனை கொலைகாரன் கவனிக்கும்போது ஒரு சிறுமி மட்டுமே தென்பட அவளை விரட்டுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சகோதரிகள் வேறு வேறு அறைகளில் பிரிய, கொலைகாரனால் ஒரு சிறுமி கொல்லப்படுகிறாள். எஞ்சியிருக்கும் பேபி என்ற சிறுமிக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது.
|
|
அவரை சன்கி பாண்டே வளர்க்கிறார். பெரிய பெண் ஆனதும் பேபி (ஹுமா குரேஷி) ஹிட் வுமன் ஆக சன்கி பாண்டேவிற்கு வேலை பார்க்கிறார். சித்து என்ற இளைஞர் பேபியை காதலிக்கிறார். அவரை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் சிந்துவின் காதலை புரிந்துகொள்ளும் பேபி ஹிட் வுமனாக இனி வேலை பார்க்க முடியாது என்று சன்கியிடம் கூறுகிறார். அதன் பின்னர் சன்கிக்கு வேலை கொடுத்து வந்த ஜாபர் அவரை தனது இடத்திற்கு தூக்கி வந்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிய வந்து பேபி பதறிப் போக, அவர் ஒரு கொலைகாரி என்பது கணவர் சித்துவிற்கு தெரிய வருகிறது. அதே சமயம் பேபி தான் ஹிட் வுமன் என்பதை கண்டறியும் போலீஸ், அவரை தேடி வீட்டிற்கு வருகிறது. அதன் பின்னர் சன்கிக்கு என்ன ஆனது? பேபி போலீஸிடம் பிடிபட்டாரா? தனது சகோதரியை கொன்றவனை தேடி பழிதீர்த்தாரா என்பதே மீதிக்கதை. தமிழில் வெளியான ஆரண்ய காண்டம், மாநகரம் படங்களின் பாணியில் நச்சிகேத் சமந்த் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து ஜஸ்மீத் கே ரீன் மற்றும் பர்வீஸ் ஷேக் ஆகிய இருவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளனர். முதல் பாதியில் கதாபாத்திரங்களின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என சற்று மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் இடைவேளைக்கு பின் திரைக்கதையில் தெறிக்கவிட்டுள்ளார் இயக்குநர். அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட், என்ன ஆகுமோ என்ற பதற்றம் என இயக்குநர் இரண்டாம் பாதி திரைக்கதையில் விளையாடி இருக்கிறார். ஹிட் வுமன் பேபியாக ஹுமா குரேஷி தத்ரூபமாக நடித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத நபராக பாவமான முகத்தை வைத்துக் கொண்டு அவர் கொலை செய்யும் காட்சிகள் செம. எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்யும் ஹுமா, கிளைமேக்சில் அதகளம் செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சிக்கந்தர் கேர் ஆரம்பத்தில் காமெடியாக அறிமுகமாகி பின் டெரர் முகத்தை காட்டுகிறார். சன்கி பாண்டே பட்டியல் படத்தில் வரும் ஹனீபாவை போன்ற கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார்; ஒரு காட்சியில் அவரது கேட்அப் சேஞ்ச் நம்மை "அடப்பாவி" என்று கூற வைக்கும். அப்பாவியான இளைஞராக ரச்சித் சிங் சிறப்பாக நடித்துள்ளார். புறாவை சுட்டவுடன் அவர் கொடுக்கும் ரியாக்சன் செம. ஹிமான்ஷு மாலிக் கிளப்பில் செய்யும் அலப்பறை எல்லாம் என்னய்யா பண்றிங்க ரகம். அவரிடம் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் மருதார் ஷெகாவத் தடுமாறும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் காமெடி. அதைத்தாண்டி அருண் குஷ்வா தனது அறிமுக காட்சியில் இருந்தே தனியாக ஸ்கோர் செய்து அசத்துகிறார். அர்ஜுன் ஐயரின் இசை, பின்னணி படத்திற்கு மிகப்பெரிய பலம். டோஜோ சேவியரின் கேமரா நேர்த்தி. நிகில், ஆஷிஷ் இருவரும் தேவையான காட்சிகளை மட்டுமே வைத்தது போல் படத்தொகுப்பை சிறப்பாக செய்துள்ளனர். க்ளாப்ஸ் ஹுமா குரேஷி, சிக்கந்தர் கேர், சன்கி பாண்டே திரைக்கதை ட்விஸ்ட்கள் கிளைமேக்ஸ் பல்ப்ஸ் பெரிதாக ஒன்றுமில்லை மொத்தத்தில் இந்த Baby Do Die Do படத்தில் மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸிலும் Hit வுமன்தான். வித்தியாசமான திரைக்கதையில் கிரைம் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். ரேட்டிங்: 3.25/5 |