கூலி படத்துக்கு போட்டியாக வார் 2 திரைப்படம்!

17.08.2025 08:05:00

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் வார் 2.

ரஜினிகாந்த நடித்த கூலி படத்துக்கு போட்டியாக நேற்று களமிறங்கியது இப்படம்.

இதுவும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில் முதல் நாளில் அந்தப் படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் ஹிருத்திக் ரோஷன்.

அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவர் கடந்த 2019ஆம் ஆண்டு வார் படத்தில் நடித்தார். அதில் அவருடன் டைகர் ஷெராஃப், அஷுதோஷ் ராணா, வாணி கபூர் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

சித்தார்த் ஆனந்த் இயக்க அவருடன் சேர்ந்து ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

சூழல் இப்படி இருக்க வார் 2 திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கவில்லை. மாறாக அயன் முகர்ஜி இயக்குநராக உள்ளே வந்தார்.

முதல் பாகத்துக்கு திரைக்கதை எழுதிய ஸ்ரீதர் ராகவனே இந்தப் பாகத்துக்கும் ஸ்க்ரீன் ப்ளே எழுதினார். இப்படத்திலும் அஷுதோஷ் ராணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி இந்தப் படத்தின் மீது இன்னொரு எதிர்பார்ப்பு எழுந்ததற்கு காரணம் ஜூனியர் என்.டி.ஆர். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தால் இந்தியா முழுவதும் அவர் பிரபலமாகிவிட்டார். அவரும் இப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.