பிரித்தானியா அருகில் கடலில் விழுந்த விமானம்!
|
பிரித்தானியாவில் விமானம் ஒன்று கடலில் விழுந்த நிலையில் அதிலிருந்த இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை மேற்கு வேல்ஸ் கடற்கரைக்கு அருகில் சிறிய ரக மைக்ரோலைட் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இந்த விமான விபத்தானது மாலை 6 மணிக்கு குவர்பெர்ட் கடற்கரைக்கு அப்பால் உள்ள மக்கள் வசிக்காத கார்டிகன் தீவுக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
|
|
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை கடலில் வேகமாக கடலில் இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கடலோரக் காவல்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விமானம் கடலில் தரையிறக்கப்பட்ட பிறகு, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலின் இறக்கைகளில் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதோடு, நியூ குவே மற்றும் கார்டிகன் ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மீட்கப்பட்ட இருவரும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் மீட்கப்பட்டு இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. |