கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
21.06.2021 16:12:01
பாராளுமன்ற கூட்டத்தை இவ்வாரம் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்ற கூட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.