ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எனக்கே உள்ளது : குமார வெல்கம!

18.01.2024 14:26:39

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி, தனக்கு மாத்திரமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அதிகளவான தகுதி எனக்கே உள்ளது.

எனவே தேர்தல் பிரசாரங்களுக்கான செலவுகளை யாராவது பொறுப்பேற்றால் போட்டியிடுவதற்கு நான் தயாரகவே உள்ளளேன்.

ஆனாலும் எனது ஜாதகத்தினை பார்க்கவில்லை. தற்போது தேர்தலில் போட்டியிடப்போவதாக சிலர் கூறுகின்றனர்.

குறிப்பாக ரை கோர்ட் அணிந்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் அவர்களில் எவரும் போட்டியிட போவதில்லை.

நாட்டில் பொருளாதார பிரச்சனை இருப்பதாக கூறினாலும் சிலர், குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கும் இவர்கள், விலை உயர்ந்த விடுதிகளிலே தங்குகின்றனர்.
இவை நிறுத்தப்பட வேண்டும்.

எவ்வாறான பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி விக்ரமசிங்க நாட்டிற்கு உகந்த விடயங்களை செய்கின்றார். ஆனாலும் நாட்டிற்கு எதிரான செயல்களையும் செய்கின்றார்.

இதனால் மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டார்