பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தம்..!

15.09.2022 09:10:56

சர்வதேசம்

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

அமெரிக்க செனட் சபையின் முக்கிய உறுப்பினர்கள் சிலரினால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக முழுமையான சர்வதேச அணுகுமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கைக்கு  அழுத்தம் 

வெளியுறவு செனட் குழுவின் தலைவர் செனட்டர் பொப் மெனிடெஸ் செனட்டர்களான டிக் டுர்பின், பெற்றரிக் லெஹெஹி, கொரே புக்கர் போன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களின் உரிமைகளை படையினர் உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியறுத்தியுள்ளார்.

 

ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.