திமுகவுக்குப் பேரிடி.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் மெகா லஞ்ச ஊழல் வழக்கில், தற்போதைய தவெக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போதைய அமைச்சர் கே.என்.நேருவின் துறையில், 2,538 பொறியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முந்தைய திமுக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, திமுக அரசு தாக்கல் செய்திருந்த அந்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெறுவதாக கூறி தவெக அரசின் புதிய மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் நேரு மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள அரசு தயார் என்ற அதிரடி சிக்னலை முதலமைச்சர் விஜய் தரப்பு கொடுத்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு தரப்பு, ஆட்சி மாறினாலும் முந்தைய அரசின் நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால தடையை நீட்டித்தனர்.