போக்குவரத்து சேவையில் ஒன்லைன் முன் கட்டண அட்டையை அறிமுகப்படுத்த தீர்மானம்
பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரத சேவைக் காகப் பயன்படுத்த ஒன்லைன் முன் கட்டண அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இது தொடர்பான திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்துத் துறை தற்போது பண அடிப்படையிலான முறையை நம்பியுள்ளது. பொது பஸ் மற்றும் ரயில்களில் பயன்படுத்தக்கூடிய ஒன்லைன் முன் கட்டண போக்குவரத்து அட்டையை அறிமுகப் படுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, இந்தத் துறைக்குத் தொடர்புடைய அனைத்து நிறு வனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பணம் செலுத்துவதால் ஏற்படும் அசெள கரியங்களைத் தவிர்ப்பதற்கான நோக்கத்துடன் ஒன்லைன் முன்-கட்டண போக்குவரத்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் முன்மொழிவுகளைப் பரிசீலித்த பின்னர் ஒன்லைன் முன்-கட்டண போக்குவரத்து அட்டை திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.