83 யானைகள் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழப்பு !
25.03.2021 08:36:30
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு மற்றும் இயற்கை காரணிகள் காரணமாகவே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்