வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி!

19.08.2022 10:10:00

நாட்டில் தற்போது எரிபொருள் நிலையங்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சி கண்டு வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியவதாவது,

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால் தேசிய எரிபொருள் உரிமம் முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட எரிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் எரிபொருள் நிலையங்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சி கண்டது.

 

கிடைக்கப் பெற்ற எரிபொருட்கள்

 

தேசிய எரிபொருள் உரிமம் முறை நடைமுறைப்படுத்த முன்னர், வாராந்தம் 12 முதல் 15 தாங்கிகளில் எரிபொருள் கிடைக்கப் பெற்றது எனவும் தற்பொழுது வாராந்தம் 4 முதல் 5 ஏரிபொருள் தாங்கிகளில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 998 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதனால் பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளது

அதேவேளை, இந்தியன் ஓயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்பட்ட மேலதிக செலவுகள் 

இந்நிலையில், வரையறுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் கிடைத்தாலும், பணியாளர் சம்பளம், தண்ணீருக்கான செலவு , மின்சாரக் கட்டணங்கள், ஏரிபொருள் தாங்கிகளில் சாரதி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளில் மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.