169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
21.08.2021 06:00:00
அரச வைத்தியசாலைகளில் மருந்தக கூட்டுதாபனத்தினால் விநியோகிக்கப்படும் 169 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனராத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, மருந்து தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையை ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நிராகரித்துள்ளார்.