மலேசியாவில் நடக்கும் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா!

22.12.2025 14:57:52

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. வரும் 27ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இவர்களுடன் மமீதா பைஜூ ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படமான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். தமிழில் விஜய்க்கு ஏற்ப சில காட்சிகள் மட்டும் மாற்றம் செய்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு கமர்சியலான ஆக்சன் படமாக இந்த படம் இருக்கப்போகிறது. அதோடு அரசியலைப் பேசும் ஒரு அதிரடி திரைப்படமாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடல் முழுக்க முழுக்க அரசியலை பேசும் பாடலாகவே வந்திருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா 27ஆம் தேதி மலேசியாவில் நடப்பதால் அந்த விழாவிற்கு முக்கிய விருந்தினர்கள் யாரும் வருவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே விஜயை சொல்லலாம். அவர் நடிக்கும் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் இந்த விழாவிற்கு வருகை தருவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது ஒரு நடிகர் என்பது மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகர் ரியோ ராஜ். அதுவும் இசை வெளியீட்டு விழா என்பது இரண்டு விதமாக நடைபெற இருக்கிறது. ஒன்று கான்செர்ட்டாகவும் மற்றொன்று இசை வெளியீட்டு விழாவாகவும் நடைபெற உள்ளது. இதில் ரியோ ராஜ் அந்த கான்செர்ட்டை மட்டும் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.