நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன்"- மாணவர்கள் மத்தியில் கவர்னர் பேச்சு
12.08.2023 11:35:15
பயிற்சி மையத்தில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் போலி பிம்பம். மருத்து ஊழலை நீட் தேர்வு தடுத்துள்ளது. தேசத்திற்கு நீட் தேர்வு கண்டிப்பாக தேவை. சென்னை: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து கலந்துரையாடல் செய்ய திட்டமிட்டார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மாணவர்கள் தனியாகவும் பெற்றோர்கள் தனியாகவும் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களிடம் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.