ஊடக சந்திப்பை இரத்து செய்த அரசாங்க அதிபர்

23.01.2023 21:57:41

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது ஊடகவியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மாவட்ட அரசாங்க அதிபர் இடை நடுவில் ஊடக சந்திப்பை இரத்து செய்து சென்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களமும் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை புறக்கணித்து வருகின்ற நிலையில் அதிருப்தி அடைந்த ஊடகவியலாளர்கள் தங்களின் கேள்விக்கணைகளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் ஆணையாளரையும் சரமாரியாக கேள்வி கேட்டதனால் திணறிய இருவரும் ஊடக சந்திப்பை நிராகரித்து சென்றுள்ளனர்.

அரசியல் பின்னணி உள்ளதா என கேள்வி 

 

 

இனிவரும் காலங்களில் ஊடகவியலாளரின் கௌரவத்தையும் அவர்களுடைய ஊடக செயற்பாட்டிலும் மாவட்ட செயலகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தவுடன் கண்கட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் வேட்புமன் தாக்கல் செய்து இரு தினங்களுக்கு பின்னதாக ஊடக சந்திப்பு நடத்தியதன் காரணம் என்ன இதன் பின் அரசியல் பின்னணி உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஊராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளின் போது ஊடகவியலாளர்களை வெளியில் காக்க வைத்து தகவல்களை வழங்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.